Skip to main content

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வெற்றியை பதிவுசெய்து முன்னேறிய இந்திய வீராங்கனைகள்!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

POOJA RANI

 

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

 

இந்த வெள்ளி பதக்கத்தை தவிர, இதுவரை இந்தியா வேறு எந்தப் பதக்கத்தையும் வெல்லவில்லை. அதேநேரத்தில் பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தோல்வியடைந்து வெளியேறினர். இந்தநிலையில், இன்று (28.07.2021) இந்திய வீராங்கனைகள் வெற்றிகளைப் பதிவுசெய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

 

பேட்மின்டனில் பி.வி. சிந்து, ஹாங்காங் வீராங்கனை சியுங் ஞான் யியை 21 - 9, 21 - 16 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற மகளிர் வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி, அமெரிக்காவின் ஜெனிபர் முசினோ பெர்னாண்டஸை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

அதேபோல் பெண்களுக்கான 69 - 75 எடைப்பிரிவு குத்துச்சண்டையில், இந்தியாவின் பூஜா ராணி, அல்ஜீரியாவின் இக்ராக் சைப்பை 5 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.