Skip to main content

இலங்கையுடன் மீண்டும் மோதும் இந்தியா! - பதிலடி கொடுக்குமா?

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

இலங்கை அணியுடன் இந்தியா மோதும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

 

India

 

இலங்கை - இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் நிதஹாஸ் டி20 கிரிக்கெட் தொடரின் 4ஆவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

 

நிதஹாஸ் தொடரின் முதல் டி20 போட்டி இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. 

 

இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுமானால், முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமையும். மேலும், புள்ளிப்பட்டியலிலும் இந்திய அணி முதல் இடத்தைப் பிடிக்கும்.