Skip to main content

இரண்டு வெற்றி.. ஈடன் கார்டனில் கிங்.. கொல்கத்தா வெல்லுமா?  - ஐ.பி.எல். எலிமினேட்டர்

Published on 23/05/2018 | Edited on 24/05/2018

ஐ.பி.எல். சீசன் 11 கிட்டத்தட்ட நிறைவுக்கட்டத்தை நெருங்கிவிட்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை முதல் தகுதிச்சுற்றில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏழாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்நிலையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் சுற்று இன்று நடைபெறவுள்ளது.
 

KKr

 

 

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. எலிமினேட்டர் சுற்றைப் பொருத்தவரை இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி சீசனைவிட்டு வெளியேறும். அதேபோல், வெற்றிபெறும் அணிக்கு இரண்டாவது தகுதிச்சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதும் வாய்ப்பு கிடைக்கும். அந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணியே இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். 
 

RR

 

இந்த சீசனில் மிகமோசமான நிலையில் பின்தங்கியிருந்த ராஜஸ்தான் அணி, அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் ப்ளே ஆஃபுக்கு தகுதிபெற்றது. அதேபோல், கொல்கத்தா அணியும் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தில் தொய்வைச் சந்தித்த கொல்கத்தா அணி, கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று வலிமையை நிரூபித்தது. இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக மோதிய 15 போட்டிகளில் கொல்கத்தா 8 முறை வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல், ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த அணிகள் மோதிய ஆறு போட்டிகளில் ஒரு முறை வெற்றியையும், இந்த சீசனில் கொல்கத்தா அணியுடன் மோதிய இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.