Skip to main content

மகளிர் உலகக்கோப்பை இந்திய அணிக்கு இவர்தான் கேப்டன்!

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
aa

 

 

 

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 

மகளிருக்கான டி20 உலகக்கோப்பை இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் இந்தப் போட்டியில், இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் களமிறங்குகின்றன. ஏ, பி என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடரில் இந்திய அணி பி பிரிவில் விளையாடவுள்ளது. அதனுடன் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. 
 

இந்திய அணியில் ஹர்மான்பிரீத் கவுர் கேப்டனாக பதவிவகிப்பார் என்று தெரிகிறது. முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ், ஸ்மிரிதி மந்தானா மற்றும் ஜெமீமா ரோட்ரிக்யூஸ் ஆகியோர் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களோடு வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி ஷர்மா, தன்யா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், அனுஜா பாட்டில், ஏக்தா பிஸ்த், ஹேமலதா, மண்ஸி ஜோஷி, பூஜா வன்ஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.