Skip to main content

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது இனவெறி தாக்குதல்...

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

bumrah siraj

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இப்போட்டியில், இனவெறி சர்ச்சை எழுந்துள்ளது.

 

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பும்ரா, சிராஜ் ஆகியோரை, மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் நேற்றும், இன்றும் இனரீதியிலான வார்த்தைகளைக் கூறி காயப்படுத்தியுள்ளனர். இன்றைய ஆட்டத்தின்போது, ஆஸ்திரேலிய ரசிகர்களின் இந்த இனரீதியிலான தாக்குதல் எல்லை மீறவே இந்திய கேப்டன் ரஹானே, அஸ்வின் ஆகியோர் நடுவர்களிடம் புகாரளித்தனர்.

 

இதன்பிறகு இன்றைய நாளின் ஆட்டம் முடிவடைந்ததும், போட்டி நடுவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், இந்திய அணி நிர்வாகத்தினர் ஆகியோர் வீரர்களோடு, இதுகுறித்து விவாதித்தனர். மேலும் இதுகுறித்து, சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.