Skip to main content

டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இங்கிலாந்து தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021
team india

 

டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வத்தை ரசிகர்களிடம் மீண்டும் ஏற்படுத்தும் விதமாகக் கொண்டுவரப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்திய அணி, இங்கிலாந்தோடு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

 

இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும், இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடருக்குமான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆஸ்திரேலிய தொடரின்போது காயமடைந்த இஷாந்த், முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குமான இந்திய அணி வருமாறு...

 

ரோஹித், சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரஹானே (வி.சி), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த், முகமது ஷமி, சிராஜ், ஷார்துல் தாகூர், உமேஷ் யாதவ். 

 

கே.எல் ராகுல் & சஹா ஆகிய இருவரும் உடல்தகுதி பெற்றால் அணியில் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.