Skip to main content

தொடரை வெல்லுமா இந்தியா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

இங்கிலாந்துடனான டி20 போட்டியில் வெற்றிபெற்று, இந்திய அணி தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. 
 

Dhoni

 

 

 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. தற்போது டி20 தொடரில் ஓல்டு ட்ரஃபோர்டில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது. அந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்து ஏரியாக்களிலும் இந்திய அணி வீரர்கள் அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
 

இந்நிலையில், இங்கிலாந்தின் கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ் மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இங்கிலாந்து அணிக்கு இன்று கட்டாய வெற்றி தேவையுள்ள நிலையில், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய போட்டியில் குல்தீப் யாதவ்வின் சுழலில் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து சுருண்டனர். எனவே, குல்தீப் யாதவ்வின் சுழல் அட்டாக்கை எதிர்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, களத்தில் இந்திய அணியை எதிர்கொள்ள இருப்பதாக ஜாஸ் பட்லர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.