Skip to main content

முதியவர் அடித்த கோல் கிக்! - பாராட்டிய சேவாக்

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். குறிப்பாக நகைச்சுவை கலந்து இவர் போடும் பதிவுகள், அதிகம் கவனம் பெறுகின்றன. 
 

Shewag

 

 

 

சுனில் கவாஸ்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலாய்த்து வெளியிட்டிருந்த பதிவாகட்டும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் அடித்த சதத்தைக் குறிப்பிட்டு பதிவிட்ட மீம்ஸ் ஆகட்டும் எல்லாமே வேற லெவன் என புகழ்ந்து தள்ளுகின்றனர் நெட்டிசன்கள். அந்த வகையில், உலகக்கோப்பை நடந்துகொண்டிருக்கும் இந்த சூழலில், அதை மையமாக வைத்து வெளியிட்டிருந்த பதிவு பலரிடமும் கவனத்தைப் பெற்றுள்ளது.
 

50 வயதைக் கடந்த ஒருவர் கால்பந்தை லாவகமாக உதைத்து, ஒரு வீட்டின் சிறிய ஜன்னல் வழியாக அனுப்பும் வீடியோ காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சேவாக், இங்கிலாந்து, பிரான்ஸ், குரோஷியாவை மறந்துவிடுங்கள்.. இவரைப் பாருங்கள் #FRABEL என பதிவிட்டுள்ளார். அதேபோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே வீடியோவை வெளியிட்டுள்ள சேவாக், இவர் மெஸ்ஸிக்கே அப்பா என பதிவிட்டுள்ளார்.