Skip to main content

பால் டேம்பரிங் சர்ச்சையில் சிக்கிய தினேஷ் சண்டிமால்!

Published on 17/06/2018 | Edited on 17/06/2018

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

BallTampering

 

 

 

இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட மேற்கிந்தியத் தீவுகள் நாட்டிற்கு சென்றுள்ளது. தினேஷ் சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுகள் உடன் மோதிய முதல் போட்டியில் 226 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், செயிண்ட் லூயிஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பந்துவீசிக் கொண்டிருந்த இலங்கை வீரர் தனஞ்செயா டிசில்வா, பந்தை சேதப்படுத்தியதாக போட்டி நடுவர்கள் அலீம் தார் மற்றும் இயன் கோல்ட் ஆகியோர் சந்தேகம் கொண்டனர். 
 

இதனால், நேற்றைய போட்டியின் தொடக்கத்தில் போட்டி நடுவர்கள் பந்தை மாற்ற முடிவு செய்தனர். இதனை ஏற்க மறுத்த இலங்கை அணீ வீரர்கள் மைதானத்திற்கு வராமல், ட்ரெஸ்ஸிங் ரூமிலேயே இருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. இதனால், கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கு போட்டி தடைப்பட்டதால் பந்தை மாற்றிய நடுவர்கள், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு போனஸ்ஸாக 5 ரன்களை வழங்கினர். அதேபோல், பந்தை சேதப்படுத்திய குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால், இலங்கை வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்திருந்தது.
 

in Articles

 

 

இந்நிலையில், ஐசிசியின் நடத்தை விதிகள் நிலை 2.2.9.ஐ மீறிய குற்றத்தில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் சிக்கியிருப்பதாக ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் பால் டேம்பரிங் சர்ச்சையில் சிக்கிய மூன்று மாதத்திற்குள் புதிய சர்ச்சை கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.