Skip to main content

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறாரா தோனி?

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
DH

 

 

இந்திய அணியை அனைத்து ஃபார்மேட்டுகளிலும் உச்சத்துக்குக் கொண்டு சென்றவர் முன்னாள் கேப்டன் தோனி. தன்மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் தன் விளையாட்டின் மூலமாக பதிலடி கொடுத்துவரும் தோனி, சில சமயங்களில் சறுக்கவும் செய்திருக்கிறார். 
 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சரியான டார்மில் இல்லை என்று விமர்சிக்கப்பட்ட போது, ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக ஆடி, மீண்டும் நம்பிக்கை பெற்றவர் தோனி. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது அவர்மீது மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த ஒரு வருடமாக தோனி அணிக்காக பெரிதாக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் முன்னாள் கேப்டன் கங்குலி.
 

இந்நிலையில், தோனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவாரா என்ற கேள்விகளை பலர் எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக லீட்ஸில் நடந்த போட்டி முடிந்தபின், ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு செல்லும் தோனி, அம்பையர்களிடம் இருந்து போட்டி பந்தை வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், தோனியே பலமுறை 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை அணியில் இருப்பேன் என தெரிவித்திருக்கிறார். 
 

 

 

2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சொதப்பலாக ஆடிய தோனி, திடீரென தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து தோனியின் நிதானமான ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள், தோனியின் பேட்டிங்போது கூச்சலிட்டது குறிப்பிடத்தக்கது.எதுவாக இருந்தாலும் அதை தோனி மட்டுமே உறுதிசெய்வார்.