Skip to main content

கடைசி இடத்தில் சென்னை அணி!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

ipl

 

 

தொடர்ச்சியான இரு தோல்விகளையடுத்து சென்னை அணி, 13-வது ஐபிஎல் தொடரின் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது.

 

13-வது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் கடந்த 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. அப்போட்டியில் வென்று உற்சாகமாக தொடரைத் துவக்கிய சென்னை அணி அடுத்து விளையாடிய இரு போட்டியிலும் தோல்வியைச் சந்தித்தது. முன்னணி வீரர்களின் விலகல் மற்றும் காயம், வீரர்களின் நிலையான ஆட்டமின்மை எனப் பல்வேறு காரணங்களால் சென்னை அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது.

 

அதில், சென்னை அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. அட்டவணையில் சென்னை அணிக்கு முந்தியுள்ள 7 அணிகளில் 5 அணிகள் 2 புள்ளி வகித்தாலும், மோசமான 'ரன் ரேட்' காரணமாக சென்னை அணி பின்தங்கியுள்ளது. இதனால், அடுத்து வரும் போட்டிகளில் வெற்றியில் மட்டும் கவனம் செலுத்தாமல், 'ரன் ரேட்' விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு சென்னை அணி உள்ளாகியுள்ளது.