Skip to main content

வரதட்சணை கொடுமையில் ஈடுபட்ட வங்கதேச கிரிக்கெட் வீரர்!

Published on 27/08/2018 | Edited on 27/08/2018

வங்கதேசத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது வரதட்சணைக் கொடுமையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. 
 

mosadek

 

 

 

வங்கதேசம் கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரர் மொசடேக் ஹூசைன். 22 வயதாகும் இவருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சர்மீன் சமீரா உஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக மொசடேக் தன்னிடம் வரதட்சணைக் கொடுமையில் ஈடுபட்டதாகவும், இறுதியில் பணத்தைக் கொண்டுவருமாறு வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் சர்மீன் சமீரா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அதிகாரி ஒருவரை நியமித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். 
 

 

 

மொசடேக் பல ஆண்டுகளாக வரதட்சணை கேட்டு சர்மீனைக் கொடுமைப் படுத்தியதாக சர்மீனின் வழக்கறிஞரும், அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்தே ஒத்துப் போகவில்லை என்று மொசடேக்கின் சகோதரரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மொசடேக் தற்போதுதான் வங்கதேச அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார். துபாயில் நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு போடப்பட்டுள்ளது அவரது எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.