Skip to main content

நீங்கள் மிடில் க்ளாஸா... வேர்ல்ட் க்ளாஸா? இங்கே சோதித்துக் கொள்ளுங்கள்... 

Published on 20/02/2018 | Edited on 20/02/2018

உலகத்தில் மிக அதிகமாக இருப்பது மிடில் க்ளாஸ் மக்கள் தான். ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, சம்பளம் வாங்கி, என்றாவது ஒரு நாள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அளவுக்கு உயரலாம் என்று கனவு மட்டுமே காண்பவர்கள், அல்லது கனவு காணக்கூடத் தயாராக இல்லாதவர்கள் அனைவரும் மிடில் க்ளாஸ்தான். பொருளியல் ஆதிக்கம் நிறைந்த இந்த உலகில் இந்த ஒப்பீடுகளைத் தவிர்க்க முடியாது. பணியாளருக்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்தவருக்கும், அதாவது மிடில் க்ளாஸுக்கும் வேர்ல்ட் க்ளாஸுக்கும் எண்ண அளவிலேயே  உள்ள 10 வேறுபாடுகளை இங்கு பார்க்கலாம்...
 

Middle class or world class
  • மிடில் க்ளாஸ் மனிதர்  ஏற்கனவே உள்ள ஒரு இலக்கை நோக்கி போட்டி போடுவார்... வேர்ல்ட் க்ளாஸ்   மனிதரோ தனக்கென ஒரு இலக்கை தானே உருவாக்கி அதை நோக்கி முன்னேறுவார்...
     
  • மிடில் க்ளாஸ் மனிதர் சவால்கள், ஆபத்துகளைத் தவிர்க்கவே விரும்புவார். வேர்ல்ட் க்ளாஸ்  மனிதரோ சவால்கள், ஆபத்துகளை நிர்வகிப்பார்கள். ஒரு விஷயத்தை தவிர்த்து ஓடுவதற்கும் அந்த  விஷயத்தை நின்று நிர்வகிப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான்  நம்மை வெற்றியாளராகவோ தோல்வியாளராகவோ உருவாக்குகிறது...  
     
  • மிடில்  க்ளாஸ்  மனிதர் எப்போதும் அதிர்ஷ்ட மனநிலையில் இருப்பார். அதாவது உலகின் செல்வம் மிகக் குறைந்தது என்றும் அது யாரேனும் அதிர்ஷ்டமுள்ள ஒருவருக்குத்தான் கிடைக்கும் என்றும் நினைப்பார். வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ உலகின் செல்வம் மிகுதியானது, அதை எடுத்துக்கொள்வது நம்  கையில்தான் இருக்கிறது  என்று நினைப்பார்...
     
  • மிடில் க்ளாஸ் மனிதர் பாதுகாப்பிற்காக வளர்ச்சியை தியாகம் செய்வார், வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ வளர்ச்சிக்காக பாதுகாப்பை தியாகம் செய்வார்...
     Succesful business woman
  • திடீரென ஒரு பெரிய  வேலை செய்ய வேண்டி வந்தால், தான் அதில் மாட்டிக்கொண்டதாக நினைப்பார் மிடில் க்ளாஸ் மனிதர். ஆனால் வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ அது தனது பொறுப்பு என்று நினைத்துச் செயல்படுவார்...
     
  • மிடில் க்ளாஸ் மனிதர் பணத்திற்கு தன் நேரத்தையும் உழைப்பையும்  விற்பார். ஆனால் வேர்ல்ட்  க்ளாஸ் மனிதரோ தனது எண்ணத்தை, புதிய திட்டங்களை பணமாக்குவார்...
     
  • மிடில் க்ளாஸ் மனிதர் உள்ளுணர்வை புறக்கணிப்பார். ஆனால், வேர்ல்ட் க்ளாஸ் மனிதர் தனது உள்ளுணர்வை நம்பி அதில் பயணிப்பார்...
     man of distress
  • மிடில் க்ளாஸ் மனிதர் எளிதாக விரக்தியடைந்துவிடுவார், ஆனால் வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ தளராமல் செயல்படுவார்...
     
  • தான் கற்றது போதும், தன் வேலைக்கு அதுவே அதிகம் என்று நினைப்பவர் மிடில் க்ளாஸ் மனிதர். மேலும் மேலும் கற்கும் ஆர்வமும் தேடலும் இருப்பவர் வேர்ல்ட் க்ளாஸ்  மனிதர்...
     
  • மிடில் க்ளாஸ் மனிதர் வாழ்க்கை முழுவதும் பிற மனிதர்களைக் கண்டு பயப்படுவார். அவர்களால் தனக்கு ஆபத்தோ, அவர்கள் தன்னை ஏமாற்றிவிடுவார்களோ, அவர்கள் தன்னை முந்தி மேலே சென்று விடுவார்களோ என்று சந்தேகப்படுவார். ஆனால்,  வேர்ல்ட் க்ளாஸ் மனிதரோ ஒவ்வொரு மனிதரையும் அன்பாக, நம்பிக்கையாகப் பார்ப்பார். 
     leader

     

உலகப்புகழ் பெற்ற தன்னம்பிக்கை பேச்சாளர் ஸ்டீவ் ஸீபோல்டு கூறும் இந்த பத்து குணாதிசயங்களில் குறைந்தது எட்டில் நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்களோ அந்த வகை தான் நீங்கள். 'நான் ஐந்து இந்தப் பக்கம் ஐந்து அந்தப் பக்கம் இருக்கிறேன். நான் மிடில் க்ளாஸும் வேர்ல்ட் க்ளாஸும் கலந்து செய்த கலவை' என்று சொன்னால், நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். ஆம், நீங்கள் மிடில் க்ளாஸா வேர்ல்ட் க்ளாஸா என்பதை, உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாமல், உங்கள் எண்ண ஓட்டம், வாழ்வில் உங்கள் அணுகுமுறை ஆகியவற்றை இங்கு பொருத்திப் பாருங்கள். பின்னர், ஒரு வேளை, நம்மில் பெரும்பாலானோர் போல நீங்களும் மிடில் க்ளாஸாக இருக்கிறீர்கள் என்றால் அவற்றை மாற்றிக் கொண்டு வேர்ல்ட் க்ளாஸாவதை நோக்கி நடைபோடலாம். இல்லையேல் இப்படியே தொடரலாம். சரி, தவறு என்று எதுவுமில்லை, எல்லாம் நம் தேர்வுதான்!       

    

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

குடும்பம் கைவிட்டதும் கலையை கையில் எடுத்தேன் - டிரெண்டிங் நடன பிரபலம் ஷர்மிளா உற்சாகம்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 LETS DANCE SHARMILA interview

 

சினிமா பாடல்களை அப்படியே ரீ-கிரியேசன் செய்து இணையத்தில் உலாவவிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்; பலர் இதனை கொண்டாட்டமாகவே செய்தாலும் சிலருக்கோ அது தனது வலியினை மறைப்பதற்கான ஒன்றாக உள்ளதாகவும் இருக்கிறது என்கின்றனர் சிலர். அந்த வகையில் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நம்முடைய நேர்காணலின் மூலம் டான்ஸர் ஷர்மிளா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்தது. சென்னை வந்த பிறகு ஆக்டிங், டான்ஸ் என்று பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறேன். பள்ளிக்காலங்களில் பல்வேறு போட்டிகளில் நான் கலந்துகொள்வேன். இதுதான் செய்வேன் என்று எப்போதும் என்னை நான் சுருக்கிக்கொண்டது கிடையாது. அனைத்து விதமான கலைகளிலும் என்னால் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். சமூக வலைதளங்களால் இன்று வாய்ப்புகள் கிடைப்பது எளிமையாகி இருக்கிறது. 

 

அம்மா, அப்பாவுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்ததால் சிறுவயது முதல் நான் ஹாஸ்டலில் இருந்தேன். தலைமையாசிரியரின் உதவியால் தான் என்னுடைய பள்ளிப்படிப்பை நான் முடித்தேன். அடுத்தகட்ட படிப்புக்கு கோர்ட் உத்தரவு மூலம் என்னுடைய தந்தை மாதாமாதம் கொடுத்த ஜீவனாம்ச பணம் உதவியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடியோக்கள் செய்ய ஆரம்பித்து சென்னை வந்தேன். எனக்கு கிடைத்த ஆயுதம் போன் தான். இரவெல்லாம் கண்விழித்து வீடியோக்கள் செய்வேன். 

 

 

நம்பிக்கையும் உழைப்பும் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்கள். கொரோனா காலத்தில் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்குக் கிடைத்த வாய்ப்பு தான் லெட்ஸ் டான்ஸ் 360. ஒவ்வொருவருக்கும் என்னுடைய ஒவ்வொரு பர்ஃபாமன்ஸ் பிடிக்கும். சிலருக்கு என்னுடைய நடிப்பும் சிலருக்கு என்னுடைய நடனமும் பிடிக்கும் என்று சொல்வார்கள். என்னுடைய டீமிடமிருந்து எனக்கு எப்போதும் நல்ல சப்போர்ட் கிடைக்கும். என்னை அவர்கள் நன்றாக ஊக்குவிப்பார்கள். 

 

பறை இசை வாசிக்கும்போது எமோஷனலாக இருக்கும். நெகட்டிவ் கமெண்டுகள் வரும்போது அதைப் புறந்தள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது கடினம். பள்ளியில் இருக்கும்போது மற்ற மாணவர்கள் அவர்களுடைய பெற்றோருடன் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக இருக்கும். ஆனால், எனக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தால் தான் என்னால் நிறைய சாதிக்க முடிகிறது என்று நினைக்கிறேன். எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எனக்கு எப்போதும் ஆதரவு. என்னுடைய வீடியோக்கள் பற்றி என் பெற்றோரிடம் சிலர் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு யூடியூப் குறித்து தெரியாது. 

 

என்னுடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு என்னுடைய ஆசிரியர்கள் பாராட்டுவது பெருமையாக இருக்கும். என்னுடைய வீடியோக்களுக்காக அதிகமான முன்தயாரிப்புகளில் நான் எப்போதும் ஈடுபடுவேன். யூடியூபில் சில்வர் பட்டன் கிடைத்த நாள் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. என்னைப் போன்று இந்தத் துறைக்குள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் பாலா சாரின் 'இவன்தான் பாலா' என்கிற புத்தகத்தைப் படிக்க வேண்டும்.