Skip to main content

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த ஒரு பழம் போதும்..!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020


எலும்புகள் வலுவடைவதற்குச் சப்போட்டாவை விடச் சிறந்த பழம் வேறு எதுவும் இல்லை. இந்தப் பழத்தினை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை திறனை அதிகரிக்கலாம். கால்சியம், பாஸ்பரஸ் முதலிய சத்துகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ளதால் எலும்புகளின் இயல்பான வளர்ச்சிக்கு இது அதிகம் உதவுகிறது.சப்போட்டாவில் கார்போ ஹைட்ரேட் மற்றும் இதர சத்துக்கள் சரிவிகித்தில் நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது பேருதவி புரிகிறது. இதல் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.இளமையான தோற்றத்தை வழங்குவதில் சப்போட்டா பழங்கள் முதலிடத்தில் இருக்கும் பழங்களில் ஒன்று.


 

jk



மன அழுத்தம் நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் சப்போட்டா பழங்கள் உதவி புரிகின்றது.இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மன பதட்டம்,தூக்கமின்மை முதலியவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படுவதில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது.இரத்தத்தை உறைய வைக்கும் சக்தி இயற்கையாகவே சப்போட்டா பழத்திற்கு அதிகம் இருக்கிறது.பெரும்பாலும் கோடைக்கால நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்க சப்போட்டா பேருதவியாக இருக்கும்.