Skip to main content

குளிர்காலத்தில் இந்த 10 உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது?

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

standar image

 

 

உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, குளிர்காலத்தில் ஒருவர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், குளிர்காலங்களில் பெரும்பாலும் பல நோய்த்தொற்றுகள் மற்றும் வியாதிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

 

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் நோய்களிடமிருந்து தற்காத்து கொள்ள குளிர்காலத்தில் சில உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது சிறந்த வழிமுறையாகும்.

 

தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்றாலும் குளிர்காலத்துக்கு உகந்ததல்ல. ஆகையால், குளிர்காலத்தில் தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது. குளிர்ந்த தயிர் சாப்பிடுவது குளிர் மற்றும் இருமலுக்கு ஆளாகக்கூடும், அதுமட்டுமின்றி மார்புச்சளி இருக்கும் போது உணவில் தயிர் சேர்த்துக்கொண்டால் அது சளியை இறுக வைத்துவிடும்.

 

நீங்கள் தயிர்  பிரியராக இருக்கும் பட்சத்தில், அறை வெப்பநிலையில் மதிய உணவு வேளையில் தயிர் சேர்த்து கொள்ளலாம்.

 

பொதுவாக குளிர்காலத்தில்  குளிர் பானங்கள், சோடாக்கள் மற்றும் மது பானங்கள் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், குளிர் பானங்கள் பருகுவது தொண்டை வலியை அதிகப்படுத்திவிடும். குறிப்பாக மது பானங்கள் பருகினால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடல் வறட்சி அதிகரித்து, சளியின் அளவோடு, காய்ச்சலும் அதிகரித்துவிடும்.

 

குளிர்காலத்தில், உங்கள் உடலுறுப்புகள் இரு மடங்கு கடினமாக உழைக்க வேண்டும். முதலில் உணவை உடலின் வெப்பநிலைக்குக் கொண்டு வந்து ஜீரணிக்க வேண்டும்.

 

குளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் படாத காரணத்தால். வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படும். எனவே, சாப்பிடும் உணவில் வைட்டமின் டி உள்ள முட்டை, பால், மீன், சிக்கன், ஆரஞ்சு பழச்சாறு, உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டு வைட்டமின் டி, பற்றாக்குறையை தவிர்க்கவும்.

 

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் உட்கொள்ளும் பொழுது, குறிப்பாக குளிர்காலத்தில் சில ஒவ்வாமைகளைத் தூண்டும். பதப்படுத்தப்பட்ட உணவை ஜீரணிக்க வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் அதிக நேரம் எடுக்கும்,  இவை செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. ஆகையால், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை குளிர்காலத்தில் தவிர்ப்பது நல்லது.

 

குறிப்பாக குளிர்காலத்தில், நம் உணவில் மிளகு, பூண்டு, இஞ்சி, சீரகம் போன்றவற்றை சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

இன்றைய நவீன உலகில் பெரும்பாலான உணவகங்களில், அல்லது வீடுகளிலும் கூட சாலடுகள் (பச்சை காய்கறிகள்) வழக்கமாக உட்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள், உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மதிய உணவின் சாலட் சாப்பிடவும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களையும் தவிர்க்கவும் பரிந்துரைக்கின்றனர்.

 

இருப்பினும், குளிர்காலங்களில் அவை பெரும்பாலான அஜீரண பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆகையால்,  நீங்கள் உண்ணும் சாலட்டுகளில் (பச்சை காய்கறி) முள்ளங்கி மற்றும் கேரட்டை சேர்த்து, மதியம் 2-3 மணிக்குள் உங்கள் மதிய உணவை  முடிப்பது சிறந்த வழிமுறையாகும்.

 

நீங்கள் இனிப்புகளை அதிகம் விரும்பி சாப்பிடும் நபராக இருக்கும் பட்சத்தில், குளிர்காலங்களின் நீங்கள் இனிப்புகளை எடுத்துக்கொள்ளும் போது சர்க்கரையின் அளவுகளை சரிபார்ப்பது அவசியம்.

 

ஏனெனில், அதிகப்படியான இனிப்பு சில சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்தியைத் வெகுவாக பாதிக்கும். ஆகையால், குளிர்காலங்களில் குறைந்த அளவு இனிப்பு எடுத்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.