Skip to main content

சூப்பர் ப்ளூ பிளட் மூன்

Published on 12/02/2018 | Edited on 21/02/2018

'சூப்பர் ப்ளூ பிளட் மூன்' என்றால் என்ன ? இந்த சூப்பர் ப்ளூ பிளட் எனும் மூன்று ஆங்கில வார்த்தையை பிரித்து மூனுடன்(நிலா) சேர்த்தால் சூப்பர் மூன், ப்ளூ மூன், பிளட் மூன் என வேறுபடுகிறது. இந்த மூன்று மூன் என்னவென்று தெரிந்து கொண்டோமானால் அதை வைத்து இந்த நிகழ்வு எவ்வாறு இருக்கும்  என்பதை தெரிந்துகொள்ளலாம். 

சூப்பர் மூன்
 

super moon


நிலாவின் மையப்புள்ளிக்கும் பூமியின் மையப்புள்ளிக்கும் சராசரி நீளம் 3,82,900 கிமீ. இந்த இடைவெளியில் இருந்து குறைந்து நிலாவுக்கும் பூமிக்குமான மையப்புள்ளியின் இடைவெளி 3,60,000கிமீ ஆகும்போதுதான் அது "சூப்பர் மூனாக" மாறுகிறது. பூமியின் பக்கத்தில் நிலா வருவதால் நிலாவின் தோற்றம் பிரமாண்டமாக காட்சியளிக்கும். அதாவது பௌர்ணமி நிலவை விட இந்த சூப்பர் மூன் தோற்றம் 14% அதிகமாகவும், அதன் ஒளி 30% அதிகமாகவும் இருக்கும். இந்த நிகழ்வு வருடத்திற்கு நான்கு அல்லது ஆறு முறை நடக்கிறது.   
 

ப்ளூ மூன்
 

blue moon


ப்ளூ மூன் என்றவுடன் நிலா நீல நிறத்தில் மாறிவிடுமா என்று கேட்காதீர்கள். நிலா நீலமாகலாம் மாறாது. இந்த நிகழ்வு என்னவென்றால், நிலாவின் சுழற்சிமுறை 29.5 நாட்கள். அதாவது, அமாவாசையில் இருந்து பௌர்ணமியாக மாறும் வரை ஆகும் நாட்கள். வருடத்திற்கு 12 பௌர்ணமி வரும். சில வருடங்களில் இந்த நடைமுறையில் இருந்து வேறுபட்டு 13வது முறையாக பௌர்ணமி பிறக்கிறது. அப்போது ஏதேனும் ஒரு மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி வரும். அந்த இரண்டாவது பௌர்ணமியைதான் ப்ளூ மூன் என்கிறார்கள். இந்த "ப்ளூ மூன்" இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வரும்.

பிளட் மூன்
 

blood moon


பிளட் மூன் என்ற சொல் அறிவியல் ரீதியாக ஆங்கிலத்தில் குறிப்பிடுவது அல்ல. சந்திர கிரகணம் நடக்கும்போது சந்திரன் தன் வெண்மை நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்தில் மாறுகிறது. அதாவது சந்திர கிரகணத்தின் போது நிலா பூமியின் அம்பிரா வழியாக கடப்பதால் சூரிய ஒளி நிலவில் மூலம் மறைக்கப்படுகிறது. சூரியனின் ஒளியை நிலா உள்வாங்குவதால் தான் இந்த சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிற மாற்றம் ஏற்படும். அதனால்தான் பிளட் மூன் என்று அழைக்கப்படுகிறது. சந்திர கிரகணம் வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது நடந்துவிடும்.
 

சூப்பர் ப்ளூ பிளட் மூன்  
 

super blue blood moon


மேலே பேசப்பட்ட மூன்று நிகழ்வுகளையும் ஒன்று சேர்த்து பாருங்கள் அதுதான் " சூப்பர் ப்ளூ பிளட் மூன்". 

Next Story

பூமிக்கு மிக அருகில் வரும் நிலவு - அறிவிப்பை வெளியிட்ட நாசா

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

 The closest moon to Earth - NASA's announcement!

 

ஒவ்வொரு ஆண்டும் பிங்க் மூன் எனப்படும் பெருநிலவு ஒரு குறிப்பிட்ட நாளில் நிகழும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பிங்க் மூன் நிகழ்வு இன்று நிகழ இருப்பதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

 

இன்றைக்கு பூமிக்கு மிக அருகில் வரும் நிலவு மிக வெளிச்சமாகவும், பெரியதாகவும் காட்சியளிக்கும். இந்த நிகழ்வுக்குப் பெரு நிலவு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதே சமயத்தில் வட அமெரிக்க நாட்டில் ஏப்ரல் மாதத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு தோன்றுவதால் இந்த நிகழ்வை பிங்க் மூன் என்றும், சூப்பர் மூன் என்றும் அழைக்கின்றனர். இன்று நள்ளிரவு சில நிமிடங்கள் பிங்க் மூனை இந்தியாவில் பார்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 

 

Next Story

நிலாவிற்கு அஸ்தியை கொண்டுசேர்க்கும் நாசாவிஞ்ஞானி!

Published on 20/07/2018 | Edited on 20/07/2018

 

moon

 

 

 

நாசாவின் பொறியாளரான தாமஸ் சைவட் என்பவர் சர்ச்சை மிகுந்த கருத்துடன் ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அதாவது உலகில் வாழும் மக்களுக்கு தொன்றுதொட்டே இறந்தால் நமது ஆத்மா சொர்க்கத்திற்கு செல்லும் அல்லது நரகத்திற்கு செல்லும் என்ற கருத்து இருந்து வருகிறது. 

 

இந்நிலையில் நாசா விஞ்ஞானி தாமஸ் உருவாக்கிய அந்த நிறுவனத்தின் பெயர் ''எலிசியம்'' இந்த நிறுவனம் பற்றி அவர் கூறுகையில், எல்லோரும் இறந்தவுடன் சொர்க்கம் செல்வோம் அல்லது நரகம் செல்வோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் உருவாக்கியுள்ள இந்த நிறுவனம் ஆஸ்ட்ரோஸ்பேஸ் டெக்னோலஜியுடன் இணைந்து இறந்தர்களின் சாம்பலை நிலவில் தூவுவதற்கான ஏற்பாடுகளை செய்யும். உண்மையான சொர்க்கத்திற்கு எனக்கு வழிகாட்ட முடியாது  நிலா எல்லோராலும் விரும்பப்படும் ஒன்று அங்கு அஸ்தியை கொண்டு சேர்ப்பது என்பது முடியாத காரியம். அதனால் கண்முன் தோன்றும் நிலா எனும் சொர்க்கத்திற்கு அஸ்தியை கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.

 

 

 

2013-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இதுவரை பலரது அஸ்தி சாம்பல்களை சேகரித்து வைத்துள்ளது. ஆனால் இதுவரை கொண்டுசேர்க்கப்படவில்லை, இதனால் கட்டணம் செலுத்தியவர்கள் எல்லாம் எப்போது நடந்து முடியும் என கேள்விகளை வைத்த வண்ணமாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.