Skip to main content

மறந்தனையே எமை………சரியா? -கவிஞர் சாவல்பூண்டி சுந்தரேசன்.

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

கலைஞர் நினைவு நாள் கவிதை.


குடிகாத்த கோமகனே!

கொற்றவனே கலைஞர் ஏறே!

மடி தீர்த்த மாமருந்தே!

மன்னவரே தமிழழுதே!

விடிகாலைப் பொழுதாய் எமை

விழிக்கவைத்த கதிரவனே!

கடிகார முள்ளாய் சுற்றி எமை

காத்து நின்ற தமிழர் தாயே!

 

 

TAMILNADU FORMER CHIEF MINISTER DMK KALAIGNER KARUNANIDHI Artist Memorial Day Poem.

 

 

காடுகளை மலைகளை

கடுமையான முற்புதற்களை

ஆடிவந்த பெரும்புயரை

ஆழிப்பெரு வெள்ளத்தை

தேடிவந்த பூகம்பத்தை

தீ உமிழ்ந்த எரிமலையை

இடியினை எரிமின்னலையாவையும் சந்தித்தாயே!

 

பொதுவாழ்வில் எண்பதாண்டு

பூர்த்தி செய்த புண்ணியனே!

இதுவரையில் எவரும்வாழா

பெருவாழ்வு வாழ்ந்தவரே!

நெஞ்சுக்கு நீதிசொல்லி

நிறைவாழ்வு வாழ்ந்தவனே!

மறந்தனையே எமை சரியா ?

 

தமிழர்களை தவிக்கவிட்டு

தாயே நீ சென்றதென்ன ?

தமிழ்த்தாயின் தலைமகனே

தமிழர்களை மறந்ததென்ன ?

வாழ்ந்திட்ட காலமெல்லாம்

தமிழருக்காய் வாழ்ந்தவரே!

இனியொரு நாள் பார்ப்போமே!

ஏங்குகிறோம் தமிழர்தாயே!