Skip to main content

பெரியாரின் வாரிசாகப் பார்க்கப்பட்டவர்... பின் காங்கிரசில் இணைந்தவர்...  

Published on 23/02/2018 | Edited on 23/02/2018

பிப்ரவரி 23 – சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத் மறைந்த நாள் 

ஈரோடு வெங்கடசாமியின் மகன் கிருஷ்ணசாமி. இவரது தம்பி தான் தமிழகத்தின் தந்தை பெரியார். கிருஷ்ணசாமியின் மகன் தான் சம்பத். 1926ல் பிறந்தார்.
 

EVK Sampath


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்ததும் சம்பத்தை திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் அமரவைத்தார், அதன்பின் கருஞ்சட்டை படையின் அமைப்பாளராக்கினார். குயடிரசு இதழின் பொறுப்பை சம்பத் கவனித்தார். பெரியாரின் வாரிசு அவர் தான் என அனைவரும் நினைத்தனர். அந்தளவுக்கு சம்பத் இயக்கத்தில் வலம் வந்தார்.

தமிழ்செய்தி, ஜெயபேரிகை என்கிற தினசரி செய்தித்தாள்களையும், அலைகள் என்கிற பெயரில் வார இதழையும் நடத்திவந்தார். பின்னர் தனிக்கட்சி தொடங்கினார். பத்திரிகை செலவு, கட்சி செலவுகளால் பெரும் நட்டத்துக்கு உள்ளானதால் பிற்காலத்தில் அவைகளை நிறுத்தினார். மேடை பேச்சுகளில் தமிழ் வார்த்தைகள் அருவியாய் கொட்டும். அதன்பொருட்டே அவரை சொல்லின் செல்வர் என அழைத்தனர்.

பெரியார் – மணியம்மை திருமணம் சம்பத் தான் பெரியாரின் வாரிசு என்கிற கருத்தை நொறுக்கிவிட்டது. இயக்கத்தின் பெரும்பான்மை தளபதிகள் பெரியாரின் முடிவால் இயக்கத்தில் இருந்து விலகினர். பெரியாரின் மூத்த தளபதியான அண்ணாவின் பின்னால் பெரியாரின் வாரிசு என நம்பப்பட்ட சம்பத் உட்பட அனைவரும் சென்றனர்.
 

Kamaraj ECKS MGR


 

திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. பெரியாருக்கு அடுத்த இடத்தில் சம்பத் இருந்தார். படித்தவர், அனுபவசாலி, சிந்தனையாளர், சட்டதிட்டங்கள் வடிவமைப்பதில் வல்லவர், இளைஞர்களை ஈர்க்கும் பேச்சாற்றல் மிக்கவர். 1957ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியாகி டெல்லி சென்றார். டெல்லி அவரது கொள்கையை மட்டுமல்ல அவரையே மாற்றியது. திராவிட நாடு கொள்கையை தீவிரமாக ஆதரித்துப் பேசிய சம்பத், படிப்படியாக அதை பேசுவதை தவிர்த்தார். இதனை அறிந்த திமுக தலைவர்கள் திமுகவை விட்டு விலகுகிறார் என்பதை அறிந்தனர்.

 

EVKS Ilangovan
 

அதோடு, கட்சியில் சம்பத் – கருணாநிதி ஆகியோர் தலைமையில் குழுக்கள் உருவாகின. அந்த குழு மோதலால் கருணாநிதியை நசுக்க எவ்வளவோ முயன்றார் சம்பத், அதில் தோல்விகளை சந்தித்தார். இதனால் திமுகவில் நடிகர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது, தன்னை மதிக்கவில்லை என குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு அண்ணாவுடன் சண்டை போட்டுக்கொண்டு திமுகவில் இருந்து  விலகுவதாக 1961 ஏப்ரல் 9ந்தேதி சம்பத்  அறிவித்தார். உடனடியாக தமிழ் தேசிய கட்சி என்கிற கட்சியை தொடங்கி நடத்தினார். அதற்கு பெரியார், பாரதிதாசன் போன்றோர் பெரும் ஆதரவு தெரிவித்தனர். 1962ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவரது கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் தனிக்கட்சி சரியாக வராது என காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டார், தோல்வி தான் கிடைத்தது.

 

Iniyan Sampath
 

இவரது மனைவி சுலோசனாசம்பத். இவர்களுக்கு 1946ல் திருணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இளங்கோவன், இனியன் என இரண்டு பிள்ளைகள். அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியில் நீண்டகாலம் இருந்தவர் சுலோசனாசம்பத். அவர்களது மகன்களில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர், அதிரடி கருத்தாளர், மத்திய இணையமைச்சர் பதவி வகித்தவர். இனியன் சம்பத்துக்கும் காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலான பொறுப்புகளில் இருந்தவர் பின்னர் பழ.நெடுமாறன் கட்சியில் இருந்தார், பின்னர் தனியாக ஒரு கட்சியை தொடங்கி நடத்துகிறார்.

 

தனது 51வது வயதில் அதாவது 23.2.1977ல் மறைந்தார் ஈ.வி.கே.சம்பத்.

 

 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்