Skip to main content

தினசரி ராசிபலன்- 04.12.2021

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும்.

kadagam

கடகம்
இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிடைக்கும்.

5

சிம்மம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

kannirasi

கன்னி
இன்று உங்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

thulam

துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம். பேச்சில் நிதானம் தேவை.

viruchagam

விருச்சிகம்
இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

danush

தனுசு
இன்று வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

magaram

மகரம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

kumbam

கும்பம்
இன்று ஆரோக்கிய பிரச்சினைகள் குறைந்து உடல்நிலை சீராகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

meenam

மீனம்
இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.