Skip to main content

யூனிட்டி-22 விண்கலத்தில் விண்வெளி புறப்பட்ட மனிதர்கள்!

Published on 11/07/2021 | Edited on 11/07/2021

 

Virgin Galactic Unity 22 space flight

அமெரிக்க தனியார் நிறுவனத்தின் யூனிட்டி-22 விண்கலம் மூலம் 5 பேர் விண்வெளிக்கு புறப்பட்டனர். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ விண்வெளி ஏவுதளத்தில் இருந்து யூனிட்டி-22 விண்கலம் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றது. நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் உட்பட 5 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு புறப்பட்டு சென்றது. 

 

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஸ்ரீதர் பாண்ட்லா விண்கலத்தில் சென்றுள்ளார். இரட்டை விமானம் 50,000 அடி உயர இலக்கை அடைந்தவுடன் யூனிட்டி- 22 விண்கலம் விடுவிக்கப்படும். யூனிட்டி விண்கலத்தில் உள்ள ஹைபிரிட் ராக்கெட் மோட்டார் இயங்கத் தொடங்கி விண்வெளிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்