Skip to main content

சர்ச்சையான ஆவணப்படம்; பிரதமர் மோடி பக்கம் நிற்கும் ரிஷி சுனக்

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

UK PM Rishi Sunak talk about PM Modi over controversial BBC documentary

 

கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செய்தி நிறுவனமான பிபிசி வெளியிட்டுள்ளது. அதில், குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டதாகவும், அதில் அப்போதைய முதல்வர் மோடி தலைமையிலான குஜராத் அரசு திட்டமிட்டே இந்த கலவரத்தை நடத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது. 

 

மேலும், குஜராத் கலவரத்திற்கு மோடியே நேரடி பொறுப்பு என்றும், இது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 'இந்தியா: மோடிக்கான கேள்வி' (ndia: The Modi Question) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், யூடியூப் நிறுவனம் தனது தளத்திலிருந்து  'இந்தியா: மோடிக்கான கேள்வி' ஆவணப்படத்தை நீக்கியுள்ளது. இது தற்போது சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

 

இந்நிலையில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஹுசைன், இந்தியா: மோடிக்கான கேள்வி என்ற ஆவணப்படம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் இங்கிலாந்து பிரதமருமான ரிஷி சுனக்,  “நிச்சயமாக, துன்புறுத்தல்கள் எங்கு நடந்தாலும் அவற்றை இங்கிலாந்து பொறுத்துக்கொள்ளாது. ஆனால், அதே சமயம் மரியாதைக்குரிய இந்தியப் பிரதமர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்