Skip to main content

ட்விட்டரிலும் வருகிறது எடிட் ஆப்ஷன்...!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டார்சே, சமீபத்தில் சான்ஃப்ரான்சிஸ்கோவில் அளித்தப்பேட்டியில் ட்விட்டரில் எடிட் ஆப்ஷன் விரைவில் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார். 

 

twitter

 

அந்த எடிட் ஆப்ஷன் எப்படி வேலை செய்யும் எனும் விளக்கத்தையும் கொடுத்த்ள்ளார். அவர் ட்விட்டரின் எடிட் ஆப்ஷன் குறித்து தெரிவித்தாவது, ட்விட்டரில் வர இருக்கும் எடிட் ஆஃப்சன் மூலம், பயனாளர் முதலில் பதிவிட்ட ட்வீட்டை எடிட் செய்யமுடியாது. ஆனால், முதலில் பதிவிட்ட ட்வீட் தவறாக இருக்கும் பட்சத்தில் அந்த ட்விட்டிற்கு விளக்கம் கொடுக்க முடியும். இதன் மூலம் தவறான காரணங்களுக்காக அந்த ட்வீட் வைரல் ஆவதை தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 


மேலும், அடிப்படையில் பதிவிட்ட ட்வீட்டை ரிட்வீட் செய்யமுடியாது, விளக்கம் கொடுக்கப்பட்ட ட்வீட்டை மட்டுமே ரிட்வீட் செய்யமுடியும். ஆனால், விளக்க ட்விட்டின் கீழ் மூல ட்விட்டும் சேர்ந்தே ரிட்விட் ஆகும் என்று ஜாக் தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதனால், ஒருவர் தான் சொன்னதை சொல்லவில்லை என்று மறுக்க முடியாது என்பது போன்ற காரணங்களை தடுக்க முடியும் என்றும் ஜாக் டார்சே தெரிவித்துள்ளார்.

 

இதுவரை தவறான ட்வீட் செய்தால் அதற்கான விளக்கமாக வேறொரு புதிய ட்வீட்டை மட்டுமே செய்ய முடியும். அதேசமயம் இப்படி இரண்டு ட்வீட்களில் ஒன்று மட்டுமே அதிகமாகவும் பகிரப்படும். ரிட்வீட் செய்வதும் ஒரு ட்வீட்-க்கு மட்டுமே நடக்கும். ஆனால் தற்போது ட்விட்டர் கொண்டுவரப்போகும் இந்த எடிட் ஆப்ஷன் மூலம் விளக்க ட்வீட்டின் கீழ் கொடுக்கப்படும் ரிட்விட்டுக்கு விளக்குமும், அதேசமயம் விளக்க ட்வீட்டுக்கு ரிட்வீட் செய்யும்போது மூல ட்வீட்டும் அதில் இருப்பதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

 

 

 

சார்ந்த செய்திகள்