Skip to main content

''இதைவிட காழ்ப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு கிடையாது'' - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! 

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

'' There is no better example of carnality '' - Minister Jayakumar interview!

 

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 3 கோடிவரை பண மோசடி செய்ததாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (17.12.2021) அவர் தலைமறைவானார்.

 

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

 

இதனிடையே, முன்ஜாமீன் கோரியும், தனது வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரியும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளபோதிலும், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த 23ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வெளிநாடுகளுக்குத் தப்புவதைத் தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் காவல்துறை லுக் அவுட் நோட்டீஸை அனுப்பியது. ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனு விவகாரத்தில் தங்கள் தரப்பைக் கேட்காமல் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

'' There is no better example of carnality '' - Minister Jayakumar interview!

 

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''நாட்டின் இறையாண்மைக்குப் பாதகம் செய்பவர்கள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகளுக்குத்தான் லுக் அவுட் நோட்டீஸ் விதிக்கப்படுவது வழக்கம். அப்படிப்பட்டவர்கள் வெளிநாட்டிற்கு எஸ்கேப் ஆகிவிடக் கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள். ஆனால் இந்த லுக் அவுட் நோட்டீஸ் என்பது அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும், நற்பெயரைக் கெடுக்க வேண்டும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என்றால் இப்படித்தான் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த விடியா அரசு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதைவிட காழ்ப்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு கிடையாது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்