Skip to main content

சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழியாக நீடிக்கும் தமிழ்மொழி!

Published on 14/05/2018 | Edited on 14/05/2018

சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழியாக தமிழ்மொழி நீடிக்கும் என அந்நாட்டு தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஈஸ்வரன் உறுதியளித்துள்ளார்.

 

Esa

 

சிங்கப்பூரில் ஆங்கிலம், மலாய், ஸ்டாண்டர்ட் மாண்டரின் ஆகிய மொழிகளோடு சேர்த்து தமிழ்மொழியும் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கிறது. அங்குள்ள நாடாளுமன்றம், பள்ளிகளில் தாய்மொழிக்கல்வி, ஒளிபரப்புத்துறை மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்மொழியும் அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்துகிறது. சிங்கப்பூரின் டாலர் நோட்டுகளிலும் தமிழ்மொழி இடம்பெற்றிருக்கிறது. 

 

இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற ‘தமிழ் சமூகமும், நவீன சிங்கப்பூரின் உருவாக்கமும்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சிங்கப்பூர் தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஈஸ்வரன் தமிழ்மொழி சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக நீடிக்கும் என உறுதியளித்தார். மேலும், சிங்கப்பூர் அரசின் கொள்கைநிலையும், தமிழ்மொழி மீதான ஆதரவும் மிகத்தெளிவானதாக இருக்கிறது. மற்றவை எல்லாமே நம் சமூகத்தின் குறிப்பாக இளைஞர்களின் கையில் இருக்கிறது. அவர்கள் நம் தமிழ் மொழியை, அதன் கலாச்சாரத்தைக் கொண்டாடவேண்டும். அன்றாட வாழ்க்கையில் தமிழ்மொழியை அதிகம் பயன்படுத்தி, அதனை மேலும் உயிரூட்டம் மிக்கதாக ஆக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்