Skip to main content

இலங்கை தொடர் குண்டு வெடிப்பை அரங்கேற்றிய இலங்கை சகோதரர்கள்!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை அன்று அடுத்தடுத்த 8 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தது. இதில் சில இடங்களில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இந்த தாக்குதலில் சுமார் 359 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படம் தற்போது வெளியானது. இந்த தீவிரவாத தாக்குதல் குறித்து இலங்கை போலீஸார் சுமார் 25 பேரை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். 

 

srilanka brothers



இந்த விசாரணையில் இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளது இலங்கை போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தப்பட்ட தீவிரவாதிகளின் வீட்டிற்கு சென்றனர். அப்போது இல்ஹாம் (36) , இன்சாப் (38)  இவர்கள் இருவரும் இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியதை இலங்கை போலீஸார் உறுதிப்படுத்தினர். இந்த இரு சகோதர்களும் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் மகன்கள் ஆவர். ஆனால் இவர்கள் ஏன் தீவிரவாத இயக்கத்திற்கு சென்றனர் என்ற விசாரணையை இலங்கை காவல்துறை முழு வீச்சில் ஈடுப்பட்டுள்ளது. அதே சமயம் இலங்கை கொழும்புவில் ஷாங்கரி - லா நட்சத்திர ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர் இல்ஹாம் என்பதும் , சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் நடத்தியது இன்சாப் என்பதும் இலங்கை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் விசாரணைக்காக இல்ஹாம் வீட்டிற்கு சென்ற போலீஸார் கர்ப்பிணியான இல்ஹாமின் மனைவி பாத்திமாவிடம் விசாரணை  நடத்திய போது அவர் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினார். அதில் அவருடைய இரு குழந்தைகள் மற்றும் மூன்று போலீஸார் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு உதவி வருவதாக அந்நாட்டு அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் தொடர்ந்து தீவிர சோதனையில் இலங்கை ராணுவம் ஈடுப்பட்டுள்ளது. இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


பி.சந்தோஷ், சேலம்.

சார்ந்த செய்திகள்