Skip to main content

'யாருடா அது தூங்கும்போது பென்சிலில் மீசை வரைஞ்சது'- ராக் ஷாக்!

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

'Someone drew a pencil mustache while it was sleeping' - Rock Shock

 

எல்லாமே சமுகவலைத்தளம் என ஆகிவிட்ட நிலையில் அதில் உலாவும் வீடியோக்கள் சொல்லவே தேவையில்லை. அதுவும் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் என அனுதினமும் வீடியோக்கள் வெளியாவதோடு வைரலும் ஆகிறது. இதில் பிரபலங்களின்  வீடியோக்களும் அடக்கம்.

 

இந்நிலையில் ரெஸ்லிங் வீரரும், நடிகருமான ராக் தூங்கிக் கொண்டிருக்கும் போது முகத்தில் குழந்தைகள் மீசை வரைந்து குறும்பு செய்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார். ராக் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவரது குழந்தைகள் அவரது முகத்தில் பென்சிலை கொண்டு தாடி, மீசை வரைந்து விட்டனர். உறக்கத்திற்கு பிறகு எழுந்த ராக் முகத்தை கண்ணாடியில் பார்க்க, முகத்தில் வரைந்திருந்த மீசை வரைந்திருந்தது தெரியவந்தது. தற்பொழுது இந்த  வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்