Skip to main content

இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை ரத்து... - அமெரிக்க அதிபர்

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வரும் வர்த்தக முன்னுரிமை சலுகையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  
 

trump


இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தில் அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை சலுகையை (ஜிஎஸ்பி) இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

இதேபோன்று அறிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு 60 நாள்களுக்குப் பிறகுதான் செயலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 
 

ஜிஎஸ்பி எனப்படும் சலுகை இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. ஆனால், தற்போது அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு இந்தியாவில் போதுமான வர்த்தக வாய்ப்பை இந்தியா உருவாக்கவில்லை. இதனால் இந்தியாவுக்கு அளித்துவரும் சலுகையை ரத்து செய்யப் போவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சமீபத்தில் இந்திய அரசு, அமெரிக்க நிறுவனமான அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் நிறுவனங்களின் விற்பனையில் சில கட்டுபாடுகளை கொண்டுவந்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

இந்தியாவில் அதிக அளவு வரி விதிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். ஏற்கெனவே இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் அலுமினியம் மீது 10 சதவீதமும், உருக்கின் மீது 25 சதவீத வரியையும் அமெரிக்கா விதித்துள்ளது.
 

இதையடுத்து 29 அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது இந்தியா கடுமையான வரியை விதித்தது. ஆனால் அதை செயல்படுத்துவதை தொடர்ந்து தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறது. தற்போது ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வரவுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்