Published on 27/06/2019 | Edited on 27/06/2019
சிந்து சமவெளி நாகரீகம் குறித்து ஆராய்ச்சி நடத்தி வரும் இந்திய ஆய்வு குழு ஈராக் பயணித்தது. அப்போது ஈராக்கில் உள்ள தர்பந்த் ஐ பெலுலா என்ற மலை பகுதியில் கையில் வில் ஏந்தி, இடுப்பில் சிறிய வாள் செருகி, மேலாடை அணியாத மன்னர் நிற்பது போன்றும், அவரை ஒருவர் குனிந்து வணங்குவது போன்றும் அமைக்கப்பட்ட குகை ஓவியத்தை கண்டுபிடித்துள்ளனர்.
4000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஓவியம் என அது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அது ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் உருவ சித்திரங்கள் என அந்த குழு கூறியது. இதனையடுத்து மத்திய வெளியுறவுத் துறை இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டுமென்றும் அந்தக் குழு பரிந்துரைத்தது. இந்நிலையில் இந்த சிற்பம் கி.மு 2000-ம் ஆண்டில் வாழந்த பழங்குடியினத் தலைவனையும், அவரால் சிறைபடுத்தப்பட்ட எதிரியையும் குறிப்பதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.