Skip to main content

”விஜய் மல்லையா பாஜக தலைவர்களுடன்.....”-ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
rahul gandhi

 

பல்வேறு இந்திய வங்கிகளிடம் இருந்து தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ9000 கோடிக்கு வாங்கிவிட்டு அதை திருப்பி கட்டமால், லண்டனில் தஞ்சமடைந்தார். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வங்கிகள் சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்திய தரப்பு சார்பில், விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டால் மும்பை சிறையில்தான் அடைக்கப்படுவார் என்று தெரிவித்தது.

 

பிறகு, மல்லையா தரப்பு, மும்பை சிறையில் வெளிச்சம் இருக்காது என்று பல சாக்குகளை சொல்லியது. அதற்காக மும்பை சிறையின் வீடியோ காட்சிகள் வேண்டும் என்று லண்டன் நீதிபதி தெரிவித்தார். இதனை தொடர்ந்து, சிபிஐ சார்பில் மும்பை சிறையின் வீடியோ காட்சி லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 

தற்போது,இதுகுறித்து நான்கு நாட்கள் ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி தெரிவிக்கையில், இந்திய சிறைச்சாலைகள் சற்று கடுமையானதுதான். ஆனால், நாட்டை விட்டே ஓடின விஜய் மல்லையாவுக்கு இவ்வளவு சொகுசு வழங்க கூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் ஒரேமாதிரியான நீதி வழங்குதல் வேண்டும். ரூ 9000 கோடி வங்கியில் கடனை பெற்றுவிட்டு, அதை திருப்பி வங்கியில் செலுத்தாமல் நாட்டைவிட்டு ஓடியவருக்கு இத்தனை சொகுசான சிறைச்சாலையை வேண்டுவதை ஏற்கமுடியாது” என்றார். இதுமட்டுமில்லாமல், இந்தியா நாடுகடத்தப்படுவதற்கு முன் விஜய் மல்லையா பாஜக தலைவர்களுடன் பேசியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.    

   

சார்ந்த செய்திகள்