Skip to main content

தாமிர ஆலையை மூடுவோம்.. காவிரியை மீட்போம்.. - ஆஸ்திரலியாவில் தமிழர்கள் முழக்கம்!

Published on 08/04/2018 | Edited on 08/04/2018

காவிரியை மீட்கவும் தூத்துக்குடியை காக்கவும், நியூட்ரினோ அழிவில் இருந்து மக்களை காக்கவும் தமிழகம் மட்டுமின்றி நாடு கடந்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கிராமங்கள்தோறும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ரயில் மறியல், சாலை மறியல், நடை பயணம் என்று பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களால் தமிழகம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. 


இந்தநிலையில் தாய்நாட்டையும் தாய்மண்ணையும் காக்க அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் நடத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் தான்.. தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் - தாமிராலையை மூடுவோம், காவிரியை மீட்போம் என்ற முழக்கங்களுடன் இன்று மதியம் ஆஸ்திரேலியாவின் விக்டோரிய மாநிலத்தின் நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன், விக்டோரியா வாழ் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விவசாயத்தை காப்போம்.. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம்.. நியூட்ரினோ சோதனையை நிறுத்துவோம் என்ற முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் குழந்தைகள், பெரியவர்கள் பதாகைகளுடன் கலந்து கொண்டனர். பலர் வேட்டி சட்டை அணிந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 உலக தமிழர்களின் போராட்டக் குரல்கள் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் எப்போது கேட்கும்..?

சார்ந்த செய்திகள்