Skip to main content

குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய அதிபர் ஜோ பைடன்...!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

hjk


இந்தியா முழுவதும் நேற்று (04.11.2021) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி தீபாவளியைக் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்தியாவைக் கடந்து உலகம் முழுவதும் இந்தியர்கள் வசிக்கும் அனைத்து இடங்களிலும் இந்தக் கொண்டாட்டத்தைக் காண முடிந்தது. அந்த வகையில் அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாட்டம் வெகு விமரிசையாக இருந்தது.

 

அங்கு வசிக்கும் இந்திய மக்கள் விளக்கேற்றி, தங்களுக்குள் இனிப்புகள் வழங்கி தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்ததோடு தனது மனைவியுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் விளக்கேற்றி தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தார். இதுதொடர்பான புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்