Skip to main content

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்.பி.யான இந்து பெண்!

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

பாகிஸ்தான் செனெட் சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு, முதன்முறையாக இந்துப் பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

Krishna

 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் செனெட் சபைக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நவாஷ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட 15 பேர் வெற்றிபெற்றனர். அவர்களில் தர்பார்கர் மாவட்டத்தில் போட்டியிட்ட கிருஷ்ணகுமாரி கோலி (39) என்பவர் வெற்றி பெற்றிருக்கிறார். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி கோலி, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கிருஷ்ணகுமாரி கோலி சிந்து மாகாணத்தில் உள்ள நாகர்பார்கர் என்ற சிறிய கிராமத்தில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். 9ஆம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தாலும், தனது கணவரின் உதவியோடு அவர் மேற்படிப்பை முடித்தார். மேலும், சிந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

 

தனது வெற்றி குறித்து பேசியுள்ள கிருஷ்ணகுமாரி கோலி, ‘ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்களின் அத்தியாவசிய உரிமைகளான கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக தொடர்ந்து குரல்கொடுப்பேன்’ என உறுதியளித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்