லண்டனில் சீனாவிற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இந்தியர்களுடன் இணைந்து போராடிய பாகிஸ்தானியர்கள் இந்தியத் தேசிய கீதத்தைப் பாடிய சம்பவம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்தியா, சீனா இடையேயான எல்லைப்பிரச்சனையை தொடர்ந்து, சீனாவுக்கு எதிரான முழக்கங்கள் இந்தியர்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளன. அந்த வகையில், சீனாவுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக லண்டன் சீன தூதரகத்தின் முன்பு கூடிய இந்தியர்கள், சீனாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும், இந்தியத் தேசியகீதத்தையும் பாடினார். அப்போது பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா மற்றும் அவருடன் வந்த மேலும் சிலர் சீனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். சீனா பாகிஸ்தான் மீது அதிகாரம் செலுத்தி வருவதாகவும், இந்த போக்கைச் சீனா கைவிடவேண்டும் எனவும் அவர்கள் முழக்கமிட்டனர். அப்போது இந்திய தேசியகீதத்தை இந்தியர்கள் பாடிய போது, அவர்களுடன் சேர்ந்து பாகிஸ்தானியர்களும் இந்திய தேசியகீதத்தை பாடினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
1st time in my life, part of Bhaarti National antheme & Vande Maatram.. pic.twitter.com/xr4Sv5ygUL
— Arif Aajakia (@arifaajakia) July 12, 2020