Skip to main content

"இந்தியாவிடம் பெற்ற கடன் தவறாக செலவழிப்பு"- இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

Opposition leader accuses Sri Lankan parliament of misappropriating loans from India

 

இந்தியா அளித்த கடனுதவியை இலங்கை அரசு தவறான வழியில் பயன்படுத்துவதாக, அந்நாட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

 

இலங்கை நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, "இந்தியா வழங்கிய பணத்தைக் கொண்டு அரசியல் ஆதாயம் அடையும் வகையில், 14,000 கிராமங்களில் கடைகள் அமைத்து வருகிறது இலங்கை அரசு. உணவகங்களிலும், பெட்ரோல் பங்க்குகளிலும் நீண்ட வரிசையில் நிற்கும் மக்களுக்கு பலன் தரும் வகையில் தான், அப்பணம் செலவழிக்கப்பட்டியிருக்க வேண்டும். மேலும், கடனுதவி விவகாரத்தில் இந்தியாவுடன் இலங்கை அரசு சில ரகசிய உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அது குறித்து, இலங்கை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்" என்று இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார். 

 

அந்நிய செலாவணி பற்றாக்குறைக் காரணமாக, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு, இந்தியா கடந்த வாரம் 7,500 கோடி ரூபாய் கடனுதவி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
14 Sri Lankan fishermen arrested
மாதிரிப்படம்

இந்தியக் கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே உள்ள இந்தியக் கடல் பகுதியில் கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடலோர காவல் படை போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

நாகை - இலங்கை இடையே கப்பல் சேவை ஒத்திவைப்பு!

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
Shipping service between Nagai and Sri Lanka postponed

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல் நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில் கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை என கூறப்பட்டது. இதனையடுத்து கனமழையால் இந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2023) நிறுத்தப்பட்டது. 

இத்தகைய சூழலில் தான் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்து. இதற்காக அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் உள்ள சாதாரண வகுப்பில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் பிரிமியம் வகை 27 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரத்து ஐநூறும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது பயணிகள் கட்டணம் செலுத்தி துரித உணவுகளை பெற்றுகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த கப்பலில் பயணம் செய்ய பல்வேறு தேதிகளில் பலரும் முன்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Shipping service between Nagai and Sri Lanka postponed

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் பயணிகள் கப்பல் சேவை மே 13 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மே 17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்திற்கு புதிய கப்பல் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்ட தேதியில் பயணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மே 16 ஆம் தேதி வரை பதிவு  செய்தோர் கட்டணத்தை திரும்ப பெற விரும்பினால் customercare@sailindsri.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.