Skip to main content

நிலவில் கடல்... கிரிஸ்டல் கிளியர் புகைப்படத்தை வெளியிட்ட நாசா

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

Ocean on the moon... NASA released crystal clear photo

 

பூமியில் இருப்பதை விட  மிகப்பெரிய கடல் வியாழன் கோளின் நிலவில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

மனிதனின் தண்ணீர் தேடல் பூமியை மட்டும் விடாமல் கண்ணனுக்கு எட்டிய கோள்களில் எல்லாம் நடந்து வருகிறது. இந்நிலையில் சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவுகளில் 6 ஆவது இடத்தில் இருக்கும் வியாழனின் நிலவான யூரோப்பாவில் பூமியில் இருப்பதை விட மிகப்பெரிய கடல் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது. சுமார் ஒரு மைல் தடிமன் கொண்ட பனி அடுக்கிற்கு கீழ் உப்புநீர் கொண்ட கடல் இருப்பதாக கண்டறிந்துள்ள நாசா விஞ்ஞானிகள், ஜூனோ என்ற விண்கலம் அனுப்பிய கிரிஸ்டல் கிளியர் புகைப்படங்களை பார்த்து திகைத்துள்ளனர். இந்த காட்சிகள், புகைப்படங்கள் வியாழனின் நிலவான யூரோப்பாவின் மேற்பரப்பிலிருந்து 150 முதல் 200 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்டது என நாசா குறிப்பிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்