Skip to main content

வட கொரியாவுடன் வலுக்கும் மோதல்; டிரம்ப்பிற்கு மிரட்டல் விடுத்த வட கொரியா

Published on 17/12/2018 | Edited on 17/12/2018

 

kim

 

சிங்கப்பூரில் நடைபெற்ற டிரம்ப்-கிம் சந்திப்பிற்கு பின் அமெரிக்கா, வட கொரியா நட்புறவு சிறிது முன்னேற்றம் அடைந்திருந்தது. இந்நிலையில் அமெரிக்கா, வட கொரியா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வட கொரியாவை சேர்ந்த 3 அமெரிக்க அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் பணி தடை விதித்தது. இதில் ஒருவர் கொரிய அதிபருக்கு நெருக்கமானவர். எனவே இதனை எதிர்த்து அமெரிக்காவிற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது வட கொரியா.

அதில், 'வடகொரியாவுடனான உறவில் நட்புறவை பேணுவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆனால்  வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே தடைகளை விதித்து வருகிறது. இதன் மூலம் அணுஆயுதம் உற்பத்தி செய்வதை வடகொரியா கைவிடும் என்று அமெரிக்கா நினைத்தால்  இது அமெரிக்காவின் தவறான கணிப்பாகும். மேலும் இது எங்களுடைய ஆணுஆயுதங்களை அழிப்பிற்கான பாதைக்கு நிரந்தர  தடையை ஏற்படுத்தும்' என்று தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 22 அணு ஆயுத சோதனைகளை வட கொரியா மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையின் மூலம் அமெரிக்கா, வட கொரியா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்