Skip to main content

இந்தியா மீது நேபாள பிரதமர் பரபரப்பு குற்றச்சாட்டு...

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

nepal pm says india try to topple him

 

வரைபட பிரச்சனையை மனதில்வைத்து இந்தியா தனது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்வதாக நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஒலி குற்றம் சாட்டியுள்ளார். 

 

இந்தியாவின் சில பகுதிகளைத் தங்களது எல்லைக்குள் சேர்த்து நேபாளம் புதிய வரைபடம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட சர்ச்சையால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பிரச்சனையை மனதில்வைத்து இந்தியா தனது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்வதாக நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஒலி குற்றம் சாட்டியுள்ளார். காட்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டதற்காக என்னைப் பதவியிலிருந்து அகற்ற ஒரு சதித்திட்டம் தீட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியத் தூதரகம் எனக்கு எதிராகச் செயல்படுவதாகவும், காட்மாண்டுவில் பல்வேறு இடங்களில், எனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற குற்றங்களைச் செய்யும் நபர்களை அனுமதிக்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்