Skip to main content

பெனாஷீர் பூட்டோ கொலைவழக்கில் முஷரப் தேடப்படும் குற்றவாளி!

Published on 31/08/2017 | Edited on 31/08/2017
பெனாஷீர் பூட்டோ கொலைவழக்கில் முஷரப் தேடப்படும் குற்றவாளி!

பெனாஷீர் பூட்டோ கொலை வழக்கில், பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.



பாகிஸ்தானில் இருமுறை பிரதமராக இருந்தவர் பெனாஷீர் பூட்டோ. இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் நாள் ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பின் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மூத்த காவல் அதிகாரிகள் சவுத் ஆசிஸ் மற்றும் குர்ரம் ஷெஷாத் ஆகியோருக்கு 17 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த வழக்கை தீவிரவாத ஒழிப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. மேலும், அவரது சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரும் இன்றைய வழக்கு விசாரணையில் கலந்துகொண்டனர்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்