Skip to main content

செவ்வாய் கிரகத்தில் ஏரி கண்டுபிடிப்பு!

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
​​mars

 

 

 

செவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி ஒன்று இருப்பதாக  இத்தாலி ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

 

அண்மையில் செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா மனிதர்கள் உயிர்வாழும் சூழல் உள்ளதா எனக் கண்டறிய நாசாவால் தெடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்  இதுதொடர்பான ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய ரோவர் ரோபோ விண்கலம் அண்மையில் செவ்வாயில் ஏற்பட்ட புயலால் சேதமடைந்து கட்டுப்பாட்டை இழந்தது.

 

mars

 

 

 

இருந்தாலும் இது தொடர்பான முயற்சிகளில் பின்வாங்க போவதில்லை என நாசா அறிவித்திருந்த நிலையில் இத்தாலிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ''மார்சிஸ்'' எனும் தொலைநோக்கியின் உதவியுடன் நடந்தப்பட்ட ஆய்வில் செவ்வாயில் உப்பு நீர் ஏரி இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

பூமியை நோக்கியுள்ள செவ்வாய் கிரகத்தின் தெற்குப்பக்கத்தில் நிலத்தினுள் ஆழ்ந்த இடத்தினுள் இந்த ஏரி இருப்பதால் அந்த நீர் உப்பு நீராக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்தாலியின் இந்த கண்டுபிடிப்பை தொடர்ந்து நாசா அந்த உப்பு நீர் ஏரி உள்ள பகுதியை ஆராய்ந்து கண்டறிய புது ரோவர் விண்கலத்தை 2020-ல் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்