Skip to main content

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு...!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

 

fhfdghgfdhgf

 

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என ஜப்பான் பரிந்துரை செய்துள்ளது. கொரியா நாட்டின் அணு ஆயுத சோதனைகள் மற்றும் கொரிய தீபகற்பத்தின் பதட்டமான சூழலை பேச்சுவார்த்தை மூலம் குறைத்ததற்காகவும் இவருக்கு இந்த பரிசை வழங்கவேண்டும் என்று ஜப்பான் பரிந்துரைத்துள்ளது. அணு ஆயுதம் மூலம் ஜப்பான் உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது வடகொரியா. இந்நிலையில் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கொரிய தீபகற்பத்தில் தற்போது பதற்றம் தணிந்துள்ளது. 

இந்த நிலையில் வடகொரியாவுடனான இந்த அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு அமெரிக்கா கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று, டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பரிந்துரைத்துள்ளார். இதனை வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்