Skip to main content

''கோககோலாவை வாங்கி கொக்கைன் சேர்ப்பேன்''-என்னதான் சொல்ல வருகிறார் எலன் மஸ்க் 

Published on 28/04/2022 | Edited on 28/04/2022

 

 "I'll buy Coca-Cola and add cocaine," says elon musk

 

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனரும், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில்  அதனை உண்மையாக்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்கிடம் ஒப்படைக்க டிவிட்டர் நிர்வாகக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 "I'll buy Coca-Cola and add cocaine," says elon musk

 

டிவிட்டரின் 9 சதவிகித பங்குகள் மட்டும் எலான் மஸ்க் வசமிருந்த நிலையில், தற்போது நிறுவனத்தின் மொத்த பங்குகளும் அவர் வசமாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சமூக ஊடகத்தை எலன் வாங்கியுள்ளது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த அதிர்வலைகள் ஓய்வதற்கு முன்னமே அடுத்த அதிர்வலைக்கு அடிபோட்டது அவரின் அடுத்த டிவிட்டர் பதிவு. அடுத்ததாக கொககோலா நிறுவனத்தை வாங்கி அதில் கொக்கைனை சேர்க்க போவதாக எலன் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதன்மூலம் என்னதான் சொல்ல வருகிறார் எலன் என பலர் குழம்பி தவித்த நிலையில், கடைசியில் அது  நகைச்சுவைக்காக தான் இட்ட பதிவு என அவரே தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கனவே மெக்டொனால் நிறுவனத்தை வாங்கி அங்குள்ள பழுதடைந்த ஐஸ் க்ரீம் இயந்திரங்களை பழுதுபார்க்க உள்ளதாக அவர் பதிவிட்டிருந்த மேற்றொரு டிவிட்டர் பதிவை மேற்கோள்காட்டி 'தம்மால் அதிசயங்களை செய்ய முடியாது' என பதிவிட்டுள்ளார். இதனால் கொககோலா நிறுவனத்தை எலன் வாங்குவதாக அவர் பதிவிட்டிருந்தது நகைச்சுவைக்காதான் எனத் தெரியவருகிறது.

 

டிவிட்டரை கட்டுப்பாடுகளற்ற ஒரு சுதந்திரமான சமூகதளமாக மாற்ற முடிவெடுத்துள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்திருக்கும் நிலையில், டிவிட்டர்  பொழுதுபோக்கு தளமாகவும் மாறும் எனவும் உறுதியளித்துள்ளார் எலன். 

 

 

சார்ந்த செய்திகள்