Skip to main content

மலேசியா நாட்டின் புதிய பிரதமர் யார்?

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

ismail sabri

 

மலேசியா நாட்டில் நடைபெற்று வந்த கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட விரிசலால் முஹ்யித்தீன் யாசின் தலைமையிலான புதிய கூட்டணி அரசு அமைந்தது. அதன்பிறகு இந்த அரசு கரோனாவை சரியாகக் கையாளவில்லை எனக் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

 

இதற்கிடையே கூட்டணிக் கட்சியான யூஎம்என்ஓ, ஊழல் புகார்கள் சம்மந்தமான விவகாரத்தால் அரசுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பிரதமர் முஹ்யித்தீன் யாசின் தலைமையிலான அரசு பெருமான்மையை இழந்தது. இதனையடுத்து முஹ்யித்தீன் யாசினும் அவரது தலைமையிலான அமைச்சரவையும் தங்களது பதவியை இராஜினாமா செய்தனர்.

 

இதனையடுத்து பிற அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்குமா அல்லது தேர்தல் நடைபெறுமா எனச் சந்தேகம் ஏற்பட்டது. இந்தநிலையில் யூஎம்என்ஓ கட்சியை சேர்ந்த இஸ்மாயில் சப்ரி யாகோப் புதிய பிரதமராக தேர்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 114 பேர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஆதரவளிப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்மாயில் சப்ரி யாகோப் ஏற்கனவே துணை பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்