Skip to main content

தாயின் வயிற்றில் இருந்து நான்கரை மாத சிசுவை வெளியே எடுத்து ஆபரேஷன்!

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

இங்கிலாந்தைச் சேர்ந்த 26 வயதுப் பெண்ணின் வயிற்றிலிருந்து நான்கரை மாத சிசுவை வெளியில் எடுத்து ஆபரேஷன் முடித்து மீண்டும் வயிற்றுக்குள் வைத்து சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

 

baby

 

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பெதான் சிம்ப்ஸன். இவருடைய வயிற்றில் வளரும் நான்கரை மாத சிசுவின் முதுகுத் தண்டுவடத்தில் வீக்கம் ஏற்பட்டிருப்பது ஸ்கேனில் தெரியவந்தது. அதை அப்படியே வளரவிடுவது ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 8 ஆம் தேதி சிசுவை வெளியே எடுத்து ஆபரேஷன் செய்வது என்று முடிவெடுத்தனர்.

 

baby

 

அதன்படி மிகவும் ரிஸ்க்கான இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்த மருத்துவர்கள், குழந்தையை மீண்டும் தாயின் கர்ப்பப்பையில் வைத்து தைத்தனர். இப்போது தாயும் சேயும் நலம். தனது குழந்தை உள்ளுக்குள் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்றும், தனது வயிற்றுக்குள் உற்சாகமாக உதைக்கிறாள் என்றும் பெதான் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்