Skip to main content

போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே புகழ் பெற்ற  WWE வீரர் மரணம்!

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

அமெரிக்காவில் பிரபலாமன WWE போட்டிகளை நம் இந்தியாவிலும் அதிகமாக சிறுவர்கள்,இளைஞர்களால் கவரப்பட்டு பார்த்து  வருகின்றன. இந்நிலையில் இந்த WWE போட்டியில் பங்குபெற்று புகழ் பெற்றவர் சில்வர் கிங் எனும் மெக்ஸிகோவை சேர்ந்த ரெஸ்லிங் வீரர். இவரின் இயற் பெயர் சீசார் குவாட்மேமோக் கோன்சலாஸ் பாரோன். தற்போது 51 வயதான சில்வர் கிங், லண்டனில் நடந்த போட்டியில் ஜுவெண்டட் குரேராவுக்கு எதிராக நேற்று போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். போட்டியின் போது திடீரென சில்வர் கிங்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் போட்டி நடந்த மேடையிலேயே உயிரிழந்தார். 
 

whristler



முதலில் அனைவரும் அவர் அமைதியாக படுத்திருப்பது போட்டியின் போது நடக்கும் விஷயங்களில் ஒன்று என நினைத்தனர். ஆனால் வெற்றி பெற்ற ஜுவெண்டட் சில நிமிடங்கள் வரை கொண்டாடி முடித்த பின்னரும்  நகராமல் மேடையில் படுத்து  கிடந்ததை பார்த்து போட்டி நடுவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பரிசோதித்த பயிற்சியாளர்கள் சில்வர் கிங் இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.இதனால் பார்வையாளர்களும் சக போட்டியாளர்களும் கடும் சோகத்தில் மூழ்கினர்.

சார்ந்த செய்திகள்