Published on 21/03/2020 | Edited on 21/03/2020
சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கரோனாவை எளிதில் கண்டறிய அல்லது சிகிச்சை அளிக்க மருந்துகள் கண்டறியப்படவில்லை என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் கரோனாவிற்கு ஏப்ரல் மாதம் இறுதிக்குள் மருந்து கண்டுபிடிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது அசித்ரோமைசின், ஹைட்ராக்ஸிக்குளோராக்குயின் ஆகிய இரண்டு மருந்துகளை கரோனா பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என தெரியவந்துள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.