Skip to main content

பிரிட்டிஷ் மக்களின் ராணி டயானா!

Published on 31/08/2017 | Edited on 31/08/2017
பிரிட்டிஷ் மக்களின் ராணி டயானா!



பிரிட்டிஷ் அரசகுடும்பத்தின் மருமகளாக வந்த இளவரசி டயானாவின் நினைவுநாள் இன்று.

அதுவரை பிரிட்டிஷ் அரசகுடும்பத்திற்கு இருந்த மரியாதையை உலக அளவில் உயர்த்திப் பிடித்தவர் டயானா. அவர் மீடியாக்களின் ராணியாக, அந்த மீடியாக்களின் வெளிச்சத்தை பயன்படுத்தி சமூகத்துக்கு தொண்டுபுரியும் எண்ணத்தை உலகம் முழுக்க விதைக்க விரும்பியவர் டயானா.

இளவரசர் சார்லஸுடன் எங்கு சென்றாலும் கேமராக்கள் டயானாவையே குறி வைத்தன. 19 வயதில் இளவரசருடன் டேட்டிங் என்பதை ஒப்புக்கொண்ட பெண்ணாக, நர்ஸரி ஸ்கூல் டீச்சராக மீடியாவில் வெளிப்பட்டார்.

அப்போதிருந்து மீடியாக்கள் அவரை துரத்திக் கொண்டே இருந்தன. டயானாவைப்பற்றி ஏதேனும் எழுதிக் கொண்டே இருந்தன. அதுவரை பிரிட்டிஷ் அரசகுடும்பத்தில் யாரைப் பற்றியும் இவ்வளவு செய்திகள் வந்ததில்லை.

இதுவே இளவரசர் சார்லஸுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிட்டதாக கூறப்பட்டது. அது நாளடைவில் இருவரும் பிரியும் அளவுக்கு சென்றது. இளவரசி டயானா தனது நண்பரான டோடி பயத்துடன் பாரீஸ் சென்றபோது அவரை படமெடுக்க துரத்திய மீடியாக்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது ஒரு சுரங்கப்பாதையில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்