Skip to main content

57 முறை காதலியை குத்திக் கொன்ற இளைஞர்; வினோத தண்டனை அளித்த நீதிமன்றம்

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

The court acquitted him for some strange reason for girlfriend  lost her life in italy

 

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் டிமிட்ரி ஃப்ரிகானோ. இவரும் அதே நாட்டைச் சேர்ந்த எரிகா ப்ரிட்டி (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2017இல் இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் உணவு உட்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே சிறிய சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை கையை மீறிய சண்டையாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த டிமிட்ரி தனது காதலியை கத்தியை வைத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மொத்தம் 57 முறை தனது காதலியைக் குத்தி கொடூரமாகக் கொன்றுள்ளார்.

 

இது குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு, அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இருப்பினும், அவர் தொடுத்த மேல்முறையீடு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அவர் 2022 ஆம் ஆண்டு வரை சிறைக்கு செல்லவில்லை. இதனிடையே, டிமிட்ரியின் உடல் எடை சுமார் 120 கிலோவாக இருந்துள்ளது. இதன் பிறகு சிறைக்கு சென்ற அவருக்கு வழக்கமான உணவு வழங்கப்பட்டுள்ளது. இதில் அவருடைய எடை 200 கிலோ வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவர் நடக்கமுடியவில்லை என்று கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, இது குறித்து சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், சிறையில் அவருக்கென தனியாக குறைந்த கலோரி உணவுகளைக் கொடுக்க முடியாது என்று கூறினர். இதனை விசாரித்த நீதிமன்றம்,  ’அதிக எடையால் அவதிப்பட்டு வரும் டிமிட்ரி இப்போது உடல் எடையைக் குறைக்க வேண்டும். இதற்கு அவர் குறைந்த அளவு கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், சிறையில் குறைந்த கலோரி உணவிற்கு வாய்ப்பு இல்லை. அவர் சிறையில் தொடர்ந்து இருந்தால் அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும். அதனால், அவர் சிறையில் இருக்க தேவையில்லை. அதற்கு பதிலாக அவர் வீட்டு சிறையில் இருக்கலாம்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்