Skip to main content

பர்தா, முகத்திரை அணிவது பெண்களின் விருப்பத்திற்குட்பட்டது! - சவுதி இளவரசர் கருத்து

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

முழுநீள பர்தா மற்றும் முகத்திரை அணிந்துகொள்வது பெண்களின் விருப்பத்திற்குபட்டது என சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். 

 

Saudi

 

சவுதி அரேபியாவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பெண்களுக்கான பல சீர்திருத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பெண்கள் கார் ஓட்டலாம், விளையாட்டு மைதானத்திற்குச் சென்று கண்டுகளிக்கலாம் உள்ளிட்ட பல அறிவிப்புகளை இவர் வெளியிட்ட போது உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றன. 

 

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த முகமது பின் சல்மான், இஸ்லாமிய கோட்பாடுகளில், பெண்கள் ஆண்களுக்கு நிகரான கண்ணியமான உடை அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறதே தவிர, முழுநீள பர்தாக்களை அணியவேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. பர்தாக்களோ, முகத்திரையோ அணிவது பெண்களின் சொந்த விருப்பம்’ என தெரிவித்துள்ளார்.

 

இருப்பினும், பர்தா அணிவதற்கு விலக்களித்து சவுதி அரேபியா எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

கையில் காசில்லை, பசி, பட்டினி; கதறும் மகன்; கண்ணீர் வடிக்கும் தாய்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023
ad

 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னத்தாய். இவரது மகன் மணிபாலன். மின்னணு சாதனங்கள் நிபுணர் என்று வெளிநாட்டில் வேலை இருப்பதாகக் கூறி சேப்டி யூனியன் காண்ட்ராக்ட்டிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலமாக சவுதி அரேபியாவிற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் என்ன வேலை செய்தார் என்று தெரியவில்லை. அவரது விசா காலம் 15.10.2023 அன்றுடன் முடிந்துவிட்டது. ஆனால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் அவரது விசாவை நீட்டிப்புச் செய்ய எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

 

இதனால் அவர் அங்கு வேறு இடத்தில் பணிக்கோ உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற வெளியில் கூட செல்ல முடியவில்லை. அவர் ஓரிடத்தில் முடங்கிக் கிடப்பதோடு அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டும், கையில் பணமில்லாமல் மன உளைச்சல் ஏற்பட்டு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல் தனித் தீவு ஒன்றில் புலம்பிக் கொண்டிருப்பதாகவும், அன்றாடம் நெருக்கடிகள், பசி, பட்டினியால் அழுது புலம்புவதாகத் தனது தாயிடம் செல்போனில் கதறி அழுதுள்ளார்.

 

மேலும், தன்னை எப்படியாவது தாய் நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யக் கேட்டு கண்ணீரும் கதறலுமாய் திரிவதை வீடியோவாகத் தனது தாய்க்கு அனுப்பியிருக்கிறார். இதனால் உறைந்து போனது மணிபாலனின் குடும்பம். தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்து மகனை எப்படியாவது இந்தியாவிற்கு மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீரும் கம்பலையுமாய் கதறியிருக்கிறார் தாய் அன்னத்தாய். தவிர வீடியோ ஒன்றில் வேதனையாக, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். நிலை குலைந்துபோயிருக்கிறது மணிபாலனின் குடும்பம்.

 

 

Next Story

உருக்குலைக்கப்பட்ட ஜபாலியா; இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Saudi Arabia and Jordan have condemned Israel for  beaten on Jabaliya

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில் காசா மீது தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் அதனைத் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன தொலைத் தொடர்பு நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களும், தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், காசாவில்  இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இணையச் சேவை இல்லாததால் தற்போது என்ன நடக்கிறது என்பது தெரியாமல் உலகத்திலிருந்து காசா தனிமைப்படுத்தப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுவரை 8,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் 60 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காசாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இனி வரும் காலங்களில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் எனக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் நேற்று பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஜபாலியாவில் உள்ள அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜபாலியாவிற்கு தஞ்சமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது மனிதாபிமானமற்றது, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்று எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய உதவ வலியுறுத்தியுள்ளன.