Skip to main content

" நானே பிரதமர் ! "-அலரி மாளிகையிலிருந்தே வெளியேற மறுக்கும் ரணில்!

Published on 28/10/2018 | Edited on 28/10/2018

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவை பிரதமராக கடந்த வெள்ளிக்கிழமை நியமித்து அவருக்குப் பதவி பிரமாணமும் செய்து வைத்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா. 

 

pm

 

மைத்ரியின் இந்த அதிரடி நடவடிக்கை பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கும் சட்ட சிக்கல்களுக்கும் வழிகோலிய நிலையில் , இதன் பின்னணியில் சர்வதேச அரசியல் விளையாடி வருகிறது. 

 

pm

 

இது ஒரு புறமிருக்க,  அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையிலிருந்து ரணில் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் ராஜபக்சே ! ஆனால், " நானே பிரதமர். என்னை ஜனாதிபதி நீக்கியது செல்லாது " என கூறி, அலரி மாளிகையிலிருந்து வெளியேற மறுத்து வறுகிறார் ரணில் விக்ரம்சிங்கே !  இதனால், அலரி மாளிகைக்கு அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளிலுள்ள உயரதிகாரிகள், புத்த பிக்குகள், அரசியல் தலைவர்கள் பலர் வந்து செல்வதால் அலரி மாளிகை பரபரப்பாக இருக்கிறது !

சார்ந்த செய்திகள்