Skip to main content

உலகையே கண்ணீரில் ஆழ்த்திய ஒற்றை புகைப்படம்... எதற்காக, எங்கு, யார் எடுத்தது இப்புகைப்படத்தை..?

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

கடந்த சில தினங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது இறந்து கிடக்கும் யானை ஒன்றின் புகைப்படம். ஆப்பிரிக்கா வனப்பகுதியில் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டு, முகம் முழுவதும் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு கிடக்கும் அந்த யானை உலக அளவில் தற்போது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

african elephants viral photo disconnection

 

 

காடுகளில் மரங்களின் பெருக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருப்பவை யானைகள். ஆனால் தந்தத்திற்காக யானைகள் வேட்டையாடப்படுவது உலகம் முழுவதும் அதிக அளவில் நடந்து வருகிறது.

தற்போது இணையத்தில்  வைரலாகும் இந்த யானை புகைப்படத்தை தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஆவணப் பட இயக்குநர் ஜஸ்டின் சல்லீவன், போட்ஸ்வானா பகுதிகளில் தனது ட்ரோன் கேமரா மூலம் எடுத்துள்ளார்.

Andrei Stenin International என்ற அமைப்பு நடத்திய புகைப்பட போட்டிக்காக அவர் எடுத்த இந்த புகைப்படம்தான் தற்போது பலரது மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தும்பிக்கை தனியாக, தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையிலும், முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையிலும்  பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்த இந்த புகைப்படத்திற்கு அவர் Disconnection என பெயரிட்டுள்ளார்.

Disconnection என்பது யானைக்கும் தும்பிக்கைக்குமான பிரிவு மட்டுமல்லாமல், வன விலங்குகளோடு மனிதர்களுக்குமான பிரிவையும் தான் குறிக்கும் என இதுகுறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார் ஜஸ்டின் சல்லீவன். 

african elephants viral photo disconnection

 

சார்ந்த செய்திகள்